அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Saturday 6 August 2011

உறவுகளின் சாம்ராஜ்யத்தில்
உணர்வுகளின் சிப்பாய்கள்
உரசிக்கொண்டால்..!!
பசப்பு மொழிகளில்
பாசத்தை அடகு வைத்து
பெற்ற உள்ளத்தை
எட்டி உதைக்கும்
உன் வார்த்தைகள்...
பெத்தவள்
மத்தவளாகும்போது
மொத்த உறவுகளையும்
நீ அறுத்துகொண்டு போகும்போது.....
வாழ்க்கையின் ஓடத்தில்
துடுப்பாய் இருந்தவர்கள்
காலத்தின் கோலத்தில்
காணாமல் போய்விடுகிறார்கள்
உண்மையை ஒழித்துகட்ட
ஊனமான காரணங்கள்...உன்
நாவின் நுனியில் நர்த்தனமாடும்..
நம்பிக்கை நாள் கேட்கும்
பெத்த இதயத்தை பிய்த்தெறிய..
வயிற்றில் சுமந்தவள்
உன் வயிற்றைப் பார்த்து
வாயடைத்து நிற்பாள்
அவள் தலைவனோ.....
தலைகவிழ தனிமையைத் தேடுவான்.

No comments:

Post a Comment